ஏப்ரல் 14-ல் வெளியாகும் ‘இந்தியன்-2’!

ஜென்டில்மேன், காதலன் ஆகிய இரு வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய படம் – இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது.

மாபெரும் வெற்றிப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளை 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பித்தார் ஷங்கர்.

பல்வேறு காரணங்களால் படம் வளர்வது தாமதமாகிக்கொண்டே சென்றது. ஒரு வழியாக ‘இந்தியன் – 2’ ஷுட்டிங்கை ஷங்கரும், கமலும் முடித்து விட்டனர்.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னம் ஒரே நேரத்தில் இரண்டு பாகங்களாக உருவாக்கியது போல், ‘இந்தியன் -2 ‘படத்தையும், இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார், ஷங்கர்.

அதாவது, ‘இந்தியன் – 2’, மற்றும் ‘இந்தியன் – 3’.  ‘இந்தியன் -3’ படத்துக்கு சில பேட்ஜ் – அப் காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டும்.

இந்தியன் – 2 படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு குடியரசு தினமான வரும் 26 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment