திரில்லர் படத்திற்காக விருது வென்ற கெவின் கோ!

ஒருவர்மீது கோபம் கொண்டு அவருக்குத் தீங்கு அல்லது அழிவு நேர வேண்டுமென்று கூறும் சொல்லே சாபம். அப்படிப்பட்ட சாபத்தையே மையமா வைத்து எடுத்த திகில் திரைப்படம்தான் மந்திரம். இப்படத்தை இயக்கியவர் கெவின் கோ.

இப்படம் தைவானில் மார்ச் 18, 2022 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் சாய் ஹ்சுவான் – யென், ஹுவாங் சின் – டிங், காவ் யிங் – சுவான், சீன் லின் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் படத்தொகுப்பாளரான கெவின் கோ-க்கு 59 ஆவது கோல்டன் ஹார்ஸ் என்ற படத்தொகுப்பாளர்கான விருது கிடைத்தது.

கெவின் கோ ஒரு தைவானிய திரைப்படத் தயாரிப்பாளர்.

ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் நடந்த விழாக்களில் திரையிடப்பட்ட தி பிரின்ட் உட்பட கல்லூரியில் அவர் தயாரித்த குறும்படங்களின் வரிசைக்காக முக்கியத்துவம் பெற்றார்.

இப்படத்தின் கதைக்கரு ஒரு சாபத்தை பற்றி தெரிந்துகொள்வதன் மூலமாகவும் அதனால்  சபிக்கப்படுவதன் மூலமாகவும் வித்தியாசமான முறையில் இறந்து போனவர்கள், அதன் அடிபடையில் ஒரு உண்மைச் சம்பவத்தை மையாமாக வைத்து எடுகப்ப்பட்டது இந்தப் படம்.

ஹீரோயினும் அவள் மகளும் ஒரு சாபத்தினாள் மாட்டிக்கொள்கிறார்கள். அதில் அவர்கள் எப்படி மாட்டுகிறார்கள். அதிலிருந்து எப்படித் தப்பிக்கின்றனார்.  இதிலிருந்து ஹீரோயின் அவருடைய பெண்ணை எப்படிக் காப்பாத்துறாங்க அப்படின்றது தான் இந்த முழுப் படம்.

இப்படம் என்னதான் திகில் நிறைந்ததாக இருந்தாலும் கூட, திரைப்படம் முழுவதும் அம்மாவின் அன்பை முழுமையாகப் பார்க்கலாம். அதுவே இப்படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.

Comments (0)
Add Comment