‘இளையராஜா’ படம் கை விடப்பட்டதா?

1976 ஆம் ஆண்டு தேவராஜ் – மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ‘இசைஞானி’ இளையராஜா. பஞ்சு அருணாசலம், இவரை அறிமுகம் செய்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்து யாரும் தொட முடியாத மிகப்பெரிய உயரத்தைத் தொட்டவர்.

அவரது வாழ்க்கை வரலாறு ‘இளையராஜா’ எனும் பெயரிலேயே சினிவாகத் தயாராகிறது.

இதில் தனுஷ், இளையராஜாவாக நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தப் படத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. கமல்ஹாசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்துக்கு ராஜாவே இசை அமைக்கிறார்.

ஆனால், அறிவிக்கப்பட்டு நீண்டக் காலம் ஆகியும் படம் தொடங்கப்படவில்லை. படம் குறித்து எந்த அப்டேட்டும் வராத காரணத்தால் அந்தப் படம் ‘டிராப்’ ஆகிவிட்டது என கோடம்பாக்கத்தில் செய்தி பரவத் தொடங்கியது.

இப்போது அந்தப் படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. படம் கை விடப்படவில்லை.

ஷுட்டிங்குக்கு முந்தைய வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போது, தனுஷ், இட்லிகடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட நான்குப் படங்களில் நடித்து வருகிறார்.

அனைத்துமே முடியும் தருவாயில் உள்ளன. அவற்றை முடித்துவிட்டு, ‘இளையராஜா’ படத்துக்கு கால்ஷீட் கொடுக்க உள்ளார்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment