ரசிகர்களைக் கவர்ந்த விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ படப் பாடல்!

தமிழ் சினிமாவில் ‘கும்கி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு. அதனைத் தொடர்ந்து சிகரம் தொடு, வானம் கொட்டட்டும், பொன்னியின் செல்வன், டாணாக்காரன், இறுகப்பற்று போன்ற படங்களின் மூலம் ரகிகர்களிடையே நாயகனாக அஸ்தத்தைப் பெற்றவர்.

இதையடுத்து விக்ரம் பிரபு தற்போது அறிமுக இயக்குநரான சுரேஷ் இயக்கத்தில் ‘லவ் மேரேஜ்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் விகரம் பிரபுவுடன் சுஸ்மிதா பட், மீனாக்‌ஷி தினேஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்‌ஷய் குமார் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் கதையை டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. 2025 கோடையில் வெளியாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான “கல்யாண கலவரமே” பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை ஷான் ரோல்டனே எழுதி இயக்கியுள்ளார்.

Comments (0)
Add Comment