நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரனின் காதல் கதை!

வீர அன்பரசு என்கிற புதுமுகம் – கதை, திரைக்கதை எழுதி, நாயகனாக நடித்து, அவரே இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ள படம் – ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’.

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் சிவராமன் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் தங்கை இஸ்ரத் காதரி இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.

பழநி பாரதி, தேன்மொழி, பொன்னடியான் ஆகியோர்கள் பாடல்கள் எழுதி உள்ளனர். இஸ்ரத் காதரி, ஹரிஷ் ராகவேந்தர், கார்த்திக், ஸ்வேதா, தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர்.

கதையின் நாயகனாக வீர அன்பரசுக்கு ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார்.

இவர்களுடன் ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குநர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோர் நடிக்கின்றனர்.

குலுமணாலி, ஜவ்வாது மலை ஆகிய இடங்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பணிகள் முடிவடைந்து படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment