ஒரு பேட்டியில் “கவிதாலயாவுக்காக எடுக்கப்பட்ட ‘ரோஜா’ படத்தைப் பார்த்து நான் நெகிழ்ந்து போனேன். என்னால்கூட இப்படி ஒரு படத்தை இயக்கி இருக்க முடியாது” என்று கூறியிருந்தேன்.
சில நாட்கள் கழித்து தொலைபேசியில் ஒருவர் “நீங்கள் எப்படி அப்படிக் கூறலாம்? இருகோடுகள் போன்ற ஒரு படத்தை மணிரத்னம் இயக்க முடியுமா?” என்றார் வருத்தமாக.
‘பாமா விஜயம்’, ‘இரு கோடுகள்’, ‘மரோசரித்ரா’ ஆகிய மூன்று காலகட்டங்களைச் சேர்ந்தவர்களும் இன்றும் எனக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் அந்த குறிப்பிட்ட படத்தை அளவுகோலாக வைத்துத்தான் மற்ற படத்தை எடை போடுகிறார்கள்.
இப்படிப் பல வயது பிரிவினர் எனக்குத் தீவிர ரசிகர்களாக அமைந்திருப்பதுதான் என் பலம்.
அதேசமயத்தில் ஒரு விதத்தில் எனது பொறுப்புகளையும் பிரச்சினைகளையும் இந்த நிலை அதிகரிக்கவும் செய்கிறது.
இயக்குநர் கே. பாலசந்தரிடம் எடுத்த பேட்டியிலிருந்து.
நன்றி: இந்து தமிழ் திசை.