தனுஷுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ?

நடிகரும் இயக்குநருமான தனுஷ் இயக்கிய, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி, நடித்த ‘இட்லி கடை’ படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வர உள்ளது.

தற்போது, பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இந்தப் படத்தை முடித்ததும், ‘போர்த் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comments (0)
Add Comment