கல்கி 2-ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்!

பிரபாஸ் ஹீரோவாக நடிக்க, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் தீபிகா படுகோன். இதற்காக அவருக்கு பெரிய சம்பளம் பேசப்பட்டிருந்தது.

‘8 மணி நேரம் மட்டுமே நடிப்பேன்’ என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் விதித்தார். இதனால் கோபமடைந்த டைரக்டர் சந்தீப், ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து அவரைத் தூக்கி விட்டார்.

இப்போது பிரபாசின் இன்னொரு படத்தில் இருந்தும் தீபியா படுகோன் நீக்கப்பட்டுள்ளார்.

அந்தப் படம் – ‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகம்

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் வில்லனாக கமல் நடித்திருந்தார். இதன் 2-ம் பாகத்தை எடுக்க நாக் அஸ்வின் ஆசைப்பட்டார். முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நட்சத்திரங்கள் 2 ஆம் பாகத்திலும் நடிப்பதாக இருந்தது. இதிலும் திபிகா படுகோனே, நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.

ஆனால், திடீரென்று ‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து படத்தைத் தயாரிக்கும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம்.

இதனை கவனமாக பரிசீலித்த பின்பே, நாங்கள் பிரிந்து பணிபுரிய முடிவு செய்துள்ளோம்.

தீபிகாவின் எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” என்று வைஜெயந்தி மூவிஸ் தெரிவித்துள்ளது.

தீபிகா, கல்கி இரண்டாம் பாகத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. தீபிகா மனம் திறந்தால் தெரியும்.

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment