தனுஷ் – நாகார்ஜுனா கூட்டணியில் புதிய படம்!

மாபெரும் திறமைகள் ஒருசேர அமையப்பெற்ற தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மற்றும் கிங் நாகார்ஜுனா அக்கினேனி இணைந்து ஒரு கலகலப்பான பல்வேறு திரை நட்சத்திரங்கள் கூடும் படைப்பானது #DNS தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவால் இயக்கப்பட உள்ளது.

#DNS (தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா என்பதன் சுருக்கம்) திரைப்படத்தின் பூஜை விழாவில் சுனில் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், பாரத் நரங், ஜான்வி நரங் மற்றும் பலர் கலந்து கொள்ள பிரமாண்டமாக  தொடங்கப்பட்டது.

படத்தின் வழக்கமான படப்பிடிப்பு இன்று முன்னணி நடிகர்கள் நடிக்கும் வசனங்கள் நிறைந்த பகுதியின் படப்பிடிப்புடன் தொடங்கியது.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக சில முக்கியமான காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன.

தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முறையே அவர்களின் சங்கராந்தி வெளியீடுகளான கேப்டன் மில்லர் (தமிழ்) மற்றும் நா சாமி ரங்கா மூலம் பிரமாண்ட வெற்றியை வழங்கியதால், இந்த முன்னணி நடிகர்கள் இணையும் பிரம்மாண்டமான காவியத்தைப் பற்றிய  உற்சாகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இரு நட்சத்திரங்களின் ரசிகர்களும் அவர்கள் திரையை ஒருசேர பகிர்ந்து கொள்வதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகநடிக்கிறார்.

ஃபிடா மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய இரண்டு தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த பிறகு, சேகர் கம்முலா பெரிய அளவிலான படைப்புடன் வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Comments (0)
Add Comment