‘கூலி’ படப்பிடிப்பு நிறைவு: மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கியது.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் கடந்தாண்டு ஏப்ரலில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து இதில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

அதன்படி நடிகர் சௌபின் சாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் நாகர்ஜுனா சைமன் என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் உபேந்திரா கலீஷா என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாகவும் படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், ‘கூலி’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள படத்தின் மேக்கிங் வீடியோவில் “It’s a super wrap” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment