தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகர்!

அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் ‘ROOT – Running Out Of Time’ எனும் புதிய science fiction கிரைம் த்ரில்லர் படத்தை இயக்க உள்ளார்.

‘நாளைய இயக்குநர் – சீசன் 1’ மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர்.

இந்தப் படத்தின் முதன்மைப் பாத்திரமாக கௌதம் ராம் கார்த்திக் நடிக்கிறார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது.

அவருடன் இணைந்து, இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் பிரபல நடிகர் அபார்ஷக்தி குரானா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

ஹிந்தியில் ‘Stree’, ‘Helmet’, ‘Luka Chuppi’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்த இவர், இப்போது தென்னிந்திய சினிமாவில் கால்பதிக்கிறார். இதனால் எதிர்பார்ப்பு அதிக அளவில் உயர்ந்துள்ளது.

இப்படத்தின் பூஜை அண்மையில் சென்னையில் நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

இதில், நடிகை பவ்யா த்ரிகா, கௌதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.

 

Comments (0)
Add Comment