இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
இதனிடையே, தனது முதல் 2 படங்களையும் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, பைசனை மிஸ் பண்ணாதீங்க என ரசிகர்களிடம் நடிகர் துருவ் விக்ரம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தப் படத்திற்கு 100 % உழைத்துள்ளதாகவும், இதுதான் உண்மையில் தனது முதல் படம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் படம் ‘பைசன்’ எனவும் துருவ் விக்ரம் கூறியுள்ளார்.