‘ஜெயிலர் 2′ படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அவருடைய 173-வது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் அவர் மாறிவிட்டார் என்றும் ‘டிராகன்’ பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகரும் இயக்குநருமான பசில் ஜோசப் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பசில் ஜோசப், இப்போது ‘ராவடி’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார்.
இது பற்றிப் பேசிய பசில் ஜோசப், “ராவடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இன்னொரு பெரிய பட்ஜெட் படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறேன். அதுபற்றி இப்போது சொல்ல மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அவர் ஒப்பந்தமாகி இருக்கும் பெரிய பட்ஜெட் படம், ‘ரஜினி 173’ என்றும் அதில் ரஜினியின் மகனாக அவர் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.