நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் உருவாகிறது. ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு யு சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளது. மேலும், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை 7 மணிக்கு துபாயில் பிரம்மாண்டமாக நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.
– தேஜேஷ்