’அயலான் -2’ : கிராபிக்ஸ் வேலைக்கு ரூ.50 கோடி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கல் திருநாளையொட்டி 12 ஆம் தேதி வெளியான சயின்ஸ் பிக்ஷன் படம் ‘அயலான்’.
‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இதனை இயக்கி இருந்தார்.

ரகுல்பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன், இஷா கோபிகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் இதுவரை உலகம் முழுக்க 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

சிறப்பான விமர்சனத்தையும், வசூலையும் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘அயலான்’ இரண்டாம் பாகத்தை, முதல் பாகத்தைத் தயாரித்த நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

அயலான்’ படத்துக்கு கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளை டிசைன் செய்த ‘பாண்டோம் எஃப்எக்ஸ்’ நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கான விஎஃப்எக்ஸ் பணிகளை முடுக்கிவிட முதல்கட்டமாக 50 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

‘அயலான்’ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் இரண்டாம் பாகத்திலும் இணைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது இதுவே முதல் முறை.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment