திரையுலகின் முன்னோடியாகத் திகழ்ந்த நிமாய் கோஷ்!

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் பிறந்து, வங்காளத்தை தாய்மொழியாகக் கொண்ட நிமாய் கோஷ் (1914 – 1988) தமிழகத்தைத் தனது இரண்டாம் தாயகமாகக் கொண்டவர். அவர் இயக்கிய ‘சின்னமூல்’ வங்கப் படம் இந்திய சினிமாவின் திருப்புமுனையாக இன்றளவும் கருதப்படுகிறது.

அவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் தமிழ்ப் படமான ‘பாதை தெரியுது பார்’ தமிழின் ஆரம்பக் கால யதார்த்தப் படம் என்கிற அடையாளத்தைப் பெற்றுள்ளது.

சினிமா சங்கங்களை நிறுவி அவற்றின் வாயிலாக மக்களிடையே சினிமா ரசனையை போதித்தவர். சிறந்த ஒளிப்பதிவாளர் என்று அவர் போற்றப்பட்டாலும் பொதுவுடமை சார்ந்த நடவடிக்கைகளுக்காக திரையுலகினரால் ஒதுக்கப்பட்டவர்.

தமிழ்நாட்டில் திரைப்படத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியத்தை நிர்ணயம் செய்ததிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

நிமாய்தா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஓர் அபூர்வமான திரைக்கலைஞரின் வரலாறான இந்நூல் தமிழ் சினிமாவின் எவரும் தவறவிடக்கூடாத ஒரு முக்கியக் காலகட்டத்தின் பதிவாகவும் விளங்குகிறது.

 ‘நிமாய் கோஷ் – புது நெறி காட்டிய திரைக்கலைஞர்’ என்ற தலைப்பில் சுனிபா பாசு எழுதிய ஆங்கில நூலின் பின்னட்டைக் குறிப்பு.

நன்றி: அம்ஷன் குமார்

Comments (0)
Add Comment