கோயல் எனும் பெயரோடு தமிழுக்கு வந்த தேவயானி!

1995-ல் பம்பாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட நாயகிகள் பட்டியலில் அண்மையில் சேர்ந்திருப்பவர் கோயல்.

‘தொட்டா சிணுங்கி’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வரும் இவர் ஒரு மங்களூர் மாது. பிறந்தது மட்டுமே மங்களூர் வளர்ந்ததும், வசித்ததும், வசிப்பதும் பம்பாயில்தான்.

நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் படித்துக் கொண்டிருந்த கோயல் எதிர்பாராமல் நடிகையானார்.

யார் அது கோயல்? வேற யாரு.. தேவயானி தான்.

இவரின் முதல் ஹிந்திப் படத்தின் பாலிவுட் பெயர்தான் அது. அந்தப் படத்தை அப்போதைய கேபிள் டீவிக்களில் முக்கியமாக ஏடிஎன் என்ற பாடல் சேனலில் இவரை நான் பார்த்து இருக்கிறேன்.

ஆரம்பத்தில் இரண்டு இந்திப் படங்களிலும் டெலிஃபிலிமிலும் நடித்த இவர் மலையாளப் படத்திலும் நடித்திருக்கிறார்.

தேவயானியின் அப்பா மங்களுர்காரர் என்றாலும், அம்மா லட்சுமி கேரளத்தைச் சேர்ந்தவர்.

‘தரீமென் ஆர்மி’ மலையாளப் படத்தின் ஸ்டில்ஸை பார்த்துவிட்டு கான்டாக்ட் பண்ணி இருக்கிறார் டைரக்டர் அதியமான்.

‘தொட்டா சிணுங்கி’ படத்தின் மற்றொரு நாயகியான ரேவதியைப் போல தானும் நல்ல நடிகையாகி பெயர் வாங்க வேண்டும் என்று விரும்பினாராம்.

அந்தப் படத்தில் நாகேந்திர பிரசாத் ஜோடியாக நடித்திருந்தார். அந்த முதல் படத்தில் அதீத கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் ‘காதல் கோட்டை’ படத்திற்குப் பிறகு பொருத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து திறமையான நடிகை என்ற பெயரும் வாங்கினார்.

பின்னாளில், காதலித்த இயக்குநரையே கைப்பிடித்து இரண்டு பெண்களுக்கு பெருமைமிக்க தாயாகவும் மிளிர்கிறார் தேவயானி.

தற்போதும் சோஷியல் மீடியாவில் எளிமையாகவும் பந்தா இல்லாமல் வலம் வரும் தேவயானியைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

அதே வேளையில் 30 வருடங்கள் கடந்து போனதும் வியப்பாக தான் இருக்கிறது.

நன்றி: ஓல்டு மெமரிஸ் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment