என் படங்களுக்கு நாயகிகள் கிடைப்பதில்லை!

நடிகர் சந்தானம் ஆதங்கம்

கல்யாண் இயக்கிய 80-ல் பில்டப் படத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ராதிகா பிரீத்தி, ஆடுகளம் நரேன், கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன் ஆனந்தராஜ், கும்கி அஸ்வின் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.

பட நிகழ்ச்சியில் சந்தானம் பேசும்போது, எனக்கு பயம் வரும்போதெல்லாம் ரசிகர்கள் பின்னால் நின்று தாங்கி பிடிக்கிறார்கள்.

நான் நாள் கணக்கில் சம்பளம் வாங்கியபோது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வந்து மூன்று படங்களுக்கான சம்பளத்தை மொத்தமாக பெற்று இடம் வாங்குங்கள் என்று வழிகாட்டி விட்டுபோனார்.

என் படங்கள் சரியாக போகாதபோது வீட்டுக்கு வந்து ஆலோசனைகள் வழங்கினார்.

இயக்குனர் கல்யாண் என்னிடம் கால்ஷீட் கேட்டபோது  15 நாட்கள்தான் இருக்கிறது என்றேன்.

உடனே பரவாயில்லை 20 நாட்களில் படத்தை முடித்து விடலாம் என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.

எனது படம் என்றாலே கதாநாயகி கிடைப்பதில்லை என்கிற தகவல் வைரல் ஆகும்.

ஆனால், இந்தப் படத்தில் தமிழ் பேசத் தெரிந்த ராதிகா பிரீத்தி அழகான கதாநாயகியாக கிடைத்துள்ளார்.

80-ஸ் ‘பில்டப்’ படம் குடும்பத்தோடு ரசிக்கும் படமாக இருக்கும்” என்கிறார்.

-நன்றி: தினந்தந்தி

Comments (0)
Add Comment