நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து சில படங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், கிழக்கு கடற்கரைச் சாலையில் ராகவேந்திரர் கோயில் கட்டுவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ராகவா லாரன்ஸ் சென்னை அம்பத்தூரில் ஏற்கெனவே ராகவேந்திரருக்கு கோயில் கட்டி இருக்கிறேன். நான் இப்போது ஈசிஆருக்கு குடிபெயர்ந்துவிட்டேன்.
இப்போது அங்கும் ராகவேந்திரருக்கு கோயில் கட்ட இருக்கிறேன். 50 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அந்தக் கோயில் இருக்கும். அடுத்து என் தம்பி எல்வின் ஹீரோவாக நடிக்கும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறேன்.
காஞ்சனா அடுத்த பாகத்தின் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன்.
ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக வரும் தகவல்களில் உண்மையில்லை என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
– நன்றி: இந்து தமிழ் திசை