தெலுங்கில் ரூ. 8 கோடி சம்பளம் வாங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

‘குளோபல் ஸ்டார்’ என அழைக்கப்படும் ராம் சரண், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர் ஆவார். ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம், அவரை வேறொரு தளத்துக்கு கொண்டுச் சென்றது.

இதனைத் தொடர்ந்து ராம் சரண், நம்ம ஊர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் டைரக்ஷனில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற அந்தப் படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

அடுத்ததாக ‘உப்பென்னா’ புகழ் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், ராம் சரண் நடிக்கிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தைத் தெலுங்கில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ராம் சரண் ஜோடியாக நடிக்கிறார். கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ராம் சரணின் 16 வது படம் என்பதால், இந்தப் படத்துக்கு தற்காலிகமாக ‘RC 16’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குத்துச்சண்டை வீரர் கோடி ராமமூர்த்தி என்பரின், வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் நடிக்க ராம் சரண், விசேஷ பயிற்சி எடுத்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். அவருக்கு 8 கோடி ரூபாய் சம்பளம்.

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment