புதிய வடிவமைப்பில் புதிய திரைக் கதை அமைப்போடு வெளிவந்துள்ள ‘அஞ்சான்’ திரையரங்குகளில் ரசிகர்களின் அமர்க்களமான ஆர்ப்பாட்ட ரசனையோடு திருவிழாக் கோலம் கண்டுள்ளது.
அண்மையில் சில புகழ்பெற்ற திரைப்படங்களை மறு வெளியீடு செய்வது ஒரு வழக்கமாக இருந்தாலும் ‘அஞ்சான்’ திரைப்படம் புதிய திரைக் கதை அமைப்போடு மறு வெளியீடு செய்ப்பட்டுள்ளது. இது யாரும் செய்யாத புதுமை.
வெளியாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தின் திரைக்கதையில் தொய்வான இடங்களை நீக்கிவிட்டு கதை வேறு மாதிரி சொல்லப்பட்டிகிறது.
சூர்யா நடித்த படங்களில் அவரது தோற்றத்திற்கு ‘அஞ்சானு’க்கு என ஒரு தனியிடம் உண்டு. ஸ்டைலிஷ் லுக். பல ஊர்களில் விளம்பரப் பலகைகளில் அஞ்சான் தோற்றத்திலேயே சூர்யா இருப்பார். நடிப்பும் துடிப்பாக இருக்கும்.
அதேபோல் சமந்தா காதல் காட்சிகளில் கலக்கியிருப்பார்.
“நீ நிதானமா இல்ல…
உன் கால் தரையில் படல.. முதல்ல நில்லு.. அப்புறம் சொல்லு,” என்று அவர் பேசிய வசனம் எந்தக் கல்லூரியில் நான் பேசப் போனாலும் மாணவர்களிடம் இந்தக் குரலே ஓங்கி ஒலிக்கும்.
லிங்குசாமியின் இயக்கம், யுவன்சங்கர் ராஜாவின் இசை, சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு அனைத்தும் பத்தாண்டுகளுக்குப் பிறகும் புதுப் படம் போலப் பளிச்சென இருக்கிறது.
இவற்றோடு என் வசனமும்.
படம் முடிந்து வரும் போது ஒரு நண்பர் கடைசி பிரேமில் கூட கலக்கிட்டீங்க சார் என்றார்.
“எதிரியிட்ட கூட துரோகி இருக்க கூடாது”
இந்த வசனம்தான் அது.
தமிழ்நாடெங்கும் எல்லா ஊர்களிலும் திரையிடப்பட்டுள்ளது.
அருகில் இருக்கும் திரையரங்கம் சென்று புதுப்பொலிவோடு வெளிவந்திருக்கும் ‘அஞ்சானை’க் கொண்டாடுங்கள்.
*
பிருந்தா சாரதி