தென்னிந்தியாவில் இப்போது ‘மோஸ்ட் வாண்டட்’ இசையமைப்பாளர் அனிருத். தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
தமிழில் ரஜினியின் கூலி, ஜெயிலர்-2, விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் மதராஸி உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் உள்ளன.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ நானியின் ‘தி பாரடைஸ்’ ஆகிய சினிமாக்களுக்கு அவர்தான் இசை. சம்பள விஷயத்தில் அனிருத் – இளையராஜாவையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் மிஞ்சி விட்டார்.
தெலுங்கு படங்களுக்கு இசை அமைக்க அவர் 12 கோடி ரூபாய் ஊதியம் பெறுகிறார். முதல் முறையாக அவர் கன்னடத்தில் நுழைந்து இருக்கிறார். யாஷ் நடித்து வரும் டாக்சிக் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க போகிறார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த வருடம் மார்ச் 19ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்துக்கும் 12 கோடி ரூபாய் அனிருத்துக்கு சம்பளமாக தரப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பரபரப்பாக இருக்கும் அனிருத், தனது சம்பளத்தை திடீரென உயர்த்திவிட்டார். இனிமேல் தனது ஊதியம் 14 கோடி ரூபாய் என உதவியாளர்கள் மூலம் அறிவித்துள்ளார்
– பாப்பாங்குளம் பாரதி