பொன்னான தருணங்களைப் படம்பிடிப்பது கடினம்!

நடிகர் அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது மகன் அல்லு அயனின் 10வது பிறந்தநாளை கடந்த 3ம் தேதி மிகுந்த பாசத்துடன் கொண்டாடினார்.

அவர் எக்ஸ் வலைதளம் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தனது சமூக ஊடக தளங்களில், தனது மகனுடன் பொன்னான தருணங்களைப் படம்பிடித்து, இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அன்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், அல்லு அர்ஜுன் அயனை ‘அவரது வாழ்க்கையின் காதல்’ என்று அன்புடன் குறிப்பிட்டார். மேலும் அவரை ‘குறும்பு நட்சத்திரம்’ என்று அன்பாக அழைத்தார்.

கடந்த 3 அன்று, அயனின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், அல்லு அர்ஜுன் பகிர்ந்துகொண்ட தருணங்களுடன், “என் உயிரின் அன்பான நச்சினிபாபு மைனாட்டி ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று எழுதினார். அல்லு அர்ஜுனுடன் அல்லு அயனுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘புஷ்பா: தி ரூல்’ படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அந்தப் பரபரப்பை கூட்டி வரும் வரும் 8 ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி ‘புஷ்பா 2’ படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாக உள்ளது.

‘புஷ்பா 2’ படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் பிரபல இயக்குனர்கள் சிவா கொரட்டாலா  மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோருடன் ப்ராஜெக்ட்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

புஷ்பா 1 படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு புஷ்பா 2 படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment