‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்தின் கடைசி இரண்டு படங்களான ‘விடாமுயற்சி’யும், ‘குட் பேட் அக்லி’யும் ஒரே மாதிரியாகக் கலவையான விமர்சனங்களை பெற்றன.
ஆனால், அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாக ‘குட் பேட் அக்லி’ இருந்ததால் வசூல் குவித்தது. இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன், தன் அடுத்த படத்தை இயக்க பல டைரக்டர்களிடம் கதை கேட்டிருந்தார் அஜித்.
‘குட் பேட் அக்லி’ கல்லா கட்டியதால், மீண்டும் அதே இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கே கால்ஷீட் கொடுத்துள்ளார் அஜித்.
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல், இந்தப் படத்தை தயாரிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள், மற்றும் டெக்னீஷியங்கள், அஜித் வெளிநாட்டு ரேஸ் பயணத்தை முடித்து விட்டு வந்ததும் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக ஏ.கே 64 என இந்தப் படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் ஷுட்டிங் தொடங்குகிறது.
படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய். அஜித் சம்பளம் மட்டும் ரூ. 175 கோடியாம்.
“இந்தப் படம் ‘குட் பேட் அக்லி’ போன்று அஜித் ரசிகர்களுக்கான படமாக மட்டும் இருக்காது. அனைத்துத் தரப்பினரையும் குறி வைத்து உருவாக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
– பாப்பாங்குளம் பாரதி.