மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற அஜித்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் தன்னுடைய 62-வது படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்ததிற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா மற்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் ப்ரியா பவானி சங்கர் நடிக்கின்றனர். விடாமுயற்சி படப்பிடிப்பானது அஜர்பைஜானில் கடந்த அக்டோபர் 4-ம் தேதி தொடங்கித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்தில் தயாராகிவரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 100 நாட்கள் அஜர்பைஜானிலே நடத்த படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் படப்பிடிப்பிற்கு ஒரு வார காலம் இடைவேளை விடப்பட்டது.

இதனை குடும்பத்தோடு செலவிட சென்னை வந்திருந்தார் நடிகர் அஜித்குமார். தற்போது விடாமுயற்சியின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் அஜர்பைஜான் புறப்பட்டார் நடிகர் அஜித்குமார்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment