தெலுங்கு நடிகர் ராம் சரண், இப்போது ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
‘இந்தியன் -2′ படத்தோடு சேர்த்து கேம் சேஞ்சர் படத்தையும் இயக்க ஆரம்பித்தார் ஷங்கர். ‘இந்தியன் -2’ ஷுட்டிங் முடிந்துள்ள நிலையில் கேம் சேஞ்சர் படப்பிடிப்பு கொஞ்சம் பாக்கி இருக்கிறது.
இந்தப் படத்தை முடித்து விட்டு ராம் சரண், புஜ்ஜி பாபு சனா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
இது, ராம் சரணின் 16-வது படம். இதனால் ‘ஆர்சி 16’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சாய் பல்லவியும் நடிக்க உள்ளார்.
‘ஆர்சி 16’ படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். கடைசியாக அவர் கவுதம் மேனன் இயக்கி, நாக சைதன்யா ஹீரோவாக நடித்து 2016 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தெலுங்கு படத்துக்கு இசை அமைத்தார்.
இந்தப் படம் ‘அச்சம் என்பது மடமையடா ‘ படத்தின் ரீமேக். அதன் பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு ரஹ்மான் மீண்டும் தெலுங்கு படத்துக்கு இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
– பாப்பாங்குளம் பாரதி.