2010-ல் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, வசுந்தரா இருவரும் முன்னணிக் கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் ‘தென்மேற்கு பருவக்காற்று’.
இந்தப் படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வசுந்தரா வென்றார்.
இதைத் தொடர்ந்து பேராண்மை, போராளி, துணிக துணிக, தலைக்கூத்தல், கண்ணை நம்பாதே போன்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம்பெற்றார்.
கடைசியாக சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக சுனில் இயக்கும் தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் வசுந்தரா, நடிகை அவதாரத்தில் இருந்து எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
தற்பொழுது தி அக்கியூஸ்ட் என்ற கிரைம் நாவலை எழுதியுள்ளார்.
அடுக்குமாடியில் நடந்த மர்மமான கொலையைப் பற்றி மையமாக வைத்து இந்தக் கிரைம் நாவல் எழுதப்பட்டுள்ளது.
ஒரு நடிகை எழுத்தாளராவது என்பது அபூர்வம் தான்.