தமிழில் மிகப்பெரிய நடிகையாக வேண்டும் என்பதே என் கனவு!

‘மிக்ஸிங் காதல்’ நாயகி சம்யுக்தா வின்யா

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்.மகாலிங்கம், டி.கண்ணன் மற்றும் ஆயிஷா அக்மல் இணைந்து தயாரிக்கும் படம் ‘மிக்ஸிங் காதல்’.

இயக்குநர் என்.பி. இஸ்மாயில் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஷிண்டே நாயகனாக நடித்திருக்கிறார். சம்யுக்தா வின்யா நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ஸ்ரேயா பாவ்னா, பிரியங்கா, திவ்யா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் மோகன் மற்றும் கோனேஸ்வரன் இசையமைத்துள்ளனர்.

கவித படத்தொகுப்பு செய்ய, கலை இயக்குநராக ஏ.கார்த்திக் பணியாற்றியிருக்கிறார். இஸ்மாயில் மற்றும் கோனேஸ் பாடல்கள் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக கார்த்திக் பணியாற்றியிருக்கிறார்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘மிக்ஸிங் காதல்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், இசையமைப்பாளர் தினா, தயாரிப்பாளர்கள் சங்க இணைச் செயலாளர் செளந்தர பாண்டியன், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, இயக்குநர் ரஷீத், மூத்த பத்திரிகையாளர் உமாதி உள்ளிட்ட ஏராளமானவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

மிக்ஸிங் காதல் படத்தைப் பற்றிப் பேசிய நடிகை சம்யுக்தா வின்யா, “நான் கன்னட நடிகை, 15 கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். அதில் 8 படங்கள் வெளியாகி விட்டது. மாடலாக என் வாழ்க்கையை தொடங்கினேன், இன்று சூப்பர் மாடலாக முன்னேறியிருக்கிறேன்.

75-க்கும் மேற்பட்ட ஃபேஷன் ஷோக்களில் பணியாற்றியிருக்கிறேன். இது என்னுடைய முதல் தமிழ்ப் படம்.  

எல்லா நடிகர்களுக்கும் தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். எனக்கும் தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை. அது நிறைவேறி இருக்கிறது. இன்னும் பெரிய நடிகையாக வேண்டும் என்பது தான் என் ஆசை. அதுவும் விரைவில் நிறைவேறும்” என்றார்.

Comments (0)
Add Comment