மக்கள் நலனுக்காக சேனல் தொடங்கிய சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை சமந்தா.

தெலுங்குப் படத்தில் நடிக்கும்போது நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் 2017 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்றது.

சமந்தா கிறிஸ்தவ மதத்தையும், நாக சைதன்யா இந்து மதத்தையும் சேர்ந்தவர்கள். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடந்தது.

2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். இதனை இருவருமே கூட்டாக அறிவித்தனர்.

இதனிடையே, ‘மயோசிட்டிஸ்’ எனும் தசை அழற்சி நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட சமந்தா, சில மாதங்கள் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார். நோய்க்காக வெளிநாடுகளில் அவர் சிகிச்சை பெற்று, இப்போது முழு அளவில் குணம் அடைந்துவிட்டார்.

சமந்தா, மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தநிலையில் அவர் ‘யூடியூப்’ சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இது பொதுமக்களின் உடல் நலம் குறித்து ஆலோசனை வழங்கும் சேனல் ஆகும். அந்த சேனலின் பெயர் ‘டேக் 20’ .

இந்த சேனலின் முதல் வீடியோ, வரும் 19-ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே பிரதியுஷா என்ற அமைப்பின் மூலம் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு சமந்தா உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சினிமா பிரபலங்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிக்காக ‘யூடியூப் சேனல்’ ஆரம்பித்து கோடிகளைக் குவிக்கும் நிலையில், பொதுமக்கள் உடல் நலனைக் கருத்தில் கொண்டு சமந்தா சேனல் தொடங்கி இருப்பதை, சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment