திருப்பதியில் நடிகை ரூபினியிடம் மோசடி!

ரூ.1.50 லட்சத்துடன் மாயமான தமிழ் இளைஞர்

80-களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை ரூபினி. ரஜினியுடன் மனிதன், கமலுடன் அபூர்வ  சகோதரர்கள், படத்தில் நடிந்துள்ளார். தமிழ் தவிர, தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களிலும் நடித்தவர்.

மோகன் என்பவரை திருமணம் செய்த ரூபினி, கல்யாணத்துக்குப் பிறகு மும்பையில் ‘செட்டில்’ ஆனார். அங்கு பரத நாட்டியம், குச்சுப்புடி நடனம் கற்பிக்கும் பள்ளியை நடத்தி வருகிறார். ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் பக்தையான ரூபினி, அடிக்கடி சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு செல்வார்.

அண்மையில் குடும்பத்துடன் அவர் திருமலை சென்றார். அங்கு ரூபினிக்கு தமிழகத்தை சேர்ந்த சரவணன் என்பவர் அறிமுகமானார்.

கோயில் தேவஸ்தான அதிகாரிகளுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறிய சரவணன், விஐபிக்களுடன் தான் எடுத்த போட்டாக்களை காட்டி ரூபினியை நம்ப வைத்தார்.

அவர்களுக்கு தேவையான சிறப்பு தரிசன வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். தரிசனம் செய்யவும், தங்கும் விடுதிக்கும், 3 பேருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.

சரவணன் கேட்ட பணத்தை, அவரது வங்கி கணக்கிற்கு ரூபினி அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்யவில்லை. தங்கும் விடுதி வசதியும் செய்யவில்லை. பணத்துடன் சரவணன் கம்பி நீட்டி விட்டார்.

ரூபினி பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டபோதும் சரவணன் எடுக்கவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை ரூபினி உணர்ந்தார்.

அவரை ஏமாற்றிய சரவணன், வேலூரில் உள்ள கோவிலில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆந்திர மற்றும் தமிழக முதலமைச்சர்களுக்கு நடிகை ரூபினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment