தொலைக்காட்சி சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கத் துவங்கிய திவ்யா கிருஷ்ணன், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக வந்து புகழ் பெற்றார்.
அதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு நடிகையாக சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், சதுரங்க வேட்டை, பூலோகம், இனிமே இப்படித்தான், ஜாம்பி, கண்ணை நம்பாதே, கால் டாக்ஸி, குலேபகாவலி போன்ற படங்களில், தனக்கான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து தனது இருப்பை வெளிப்படுத்தினார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வள்ளி, வம்சம், அருவி உள்ளிட்ட சீரியல்களிலும் விஜய் தொலைக்காட்சியில் வேலைக்காரன் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துப் புகழ்பெற்றார்.
பல்வேறு வெப் தொடர்களிலும் நடித்து வரும் திவ்யா கிருஷ்ணன், தற்போது புதிய படம் ஒன்றிலும் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக, முதன்மைப் பாத்திரத்தில், காவல்துறை அதிகாரியாக திவ்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கியுள்ளது.
படத் துவக்க விழாவில், பட நாயகி திவ்யா கிருஷ்ணன், பவிகிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் சதா முருகன், இயக்குநர் செ.ரா.ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ச.ர.மணிகன்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
படம் தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
திவ்யா கிருஷ்ணனின் கலைப்பயணம் இனிதே வெற்றிபெற வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.