விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் வெளிவந்த ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கட்டா குஸ்தி , எஃப் ஐ ஆர் போன்ற வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக அடுத்து வரவுள்ள ‘ஆர்யன்’ படமும் அதிக பொருட்செலவில், ஆக்சன் மற்றும் அசத்தலான பொழுது போக்குத் திரைப்படமாக உருவாகி வருகிறது.
விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் கோகுல் கூட்டணியில் உருவாகவுள்ள விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரடக்சன் நம்பர் 10 திரைப்படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மிகப்பெரும் பட்ஜெட்டில், மிரட்டலான ஆக்சன் எண்டர்டெயினராக உருவாக்கப்படவுள்ளது.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரடக்ஷன் நம்பர் 10′ திரைப்படம், நடிகர் விஷ்ணு விஷால் நடித்துவரும், தற்போதைய திரைப்படங்களின் பணிகள் முடிந்தவுடன் துவங்க உள்ளது.
ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற வெற்றிப்படங்களையும் மற்றும் விரைவில் வரவிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தையும் இயக்கியுள்ள இயக்குநர் கோகுல் இப்படத்தை இயக்கவுள்ளார்.
தற்போது இப்படத்தின் முதல்கட்ட முன் தயாரிப்புப் பணிகளை துவக்கியுள்ள நிலையில், விரைவில் இப்படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.