உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தைக் குறிக்கும் விதமாக உருவாகி வருகிற படம் ‘அக்யூஸ்ட்’.
இப்படத்தை, கன்னட திரையுலகில் வெற்றிப் படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு புழல் மத்திய சிறையில் உரிய அனுமதி பெற்று ‘அக்யூஸ்ட்’ படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு யோகி பாபு உள்ளிட்டோரின் சிறப்பான பங்களிப்போடு தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
தற்போது சென்னைக்கு அருகே உள்ள குத்தம்பாக்கம் பகுதியில் பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை பிரபல மாஸ்டர் ஸ்டன்ட் சில்வா இயக்கி வருகிறார். மிக அதிகப் பொருட்செலவில் ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படிப் பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் உதயா நடிக்கிறார்.
அவருடன் முதல் முறையாக அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்துள்ளனர்.
மருதநாயகம். ஐ ஒளிப்பதிவு செய்ய நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார். முன்னணி எடிட்டரான கே.எல். பிரவீன் படத் தொகுப்பைக் கையாளுகிறார். கலை இயக்கம் – ஆனந்த் மணி, பத்திரிக்கைத் தொடர்பு – நிகில் முருகன்.