அயலான் படத்தை தொடர்ந்து இயக்குநர் ரவிக்குமார் நடிகர் சூர்யாவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகிறது. இப்படம் இந்தாண்டு வெளியாகவுள்ள நிலையில், அடுத்து சூர்யா – 43, வாடிவாசல் ஆகியப் படங்களில் சூர்யா நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், இன்று நேற்று நாளை, அயலான் படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
– தேஜேஷ்