7ஜி ரெயின்போ காலனி-2 தயார்!

கடந்த 2004-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்துமே இன்று வரை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படும் ஆல்பமாக உள்ளது.

இந்த நிலையில் ‘நானே வருவேன்’ படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் ‘7ஜி ரெயின்போ காலனி’யின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக 2-ம் பாகம் தயாராகி வரும் நிலையில், இதற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் ‘7ஜி ரெயின்போ காலனி’ இரண்டாம் பாகத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன். விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment