கன்னட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள கன்னட திரைப்படம் ’45’.
கன்னட திரையுலகின் மூன்று முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து மிரட்ட, மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது.
இப்படத்தின் தமிழ் பதிப்பின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அர்ஜுன் ஜன்யா, சென்னை வந்தாலே எனக்கு ராஜா சார், ஏ ஆர் ரஹ்மான் சார் நினைப்பு தான் ஞாபகம் வரும். அவர்களின் தீவிர ரசிகன் நான்.
என் படம் தமிழில் வெளியாவது மகிழ்ச்சி. இந்தக் கதையை ரெடி செய்தவுடன் சிவாண்ணாவிடம் சொன்னேன், நீயே இந்தப் படத்தை பண்ணு என அவர்தான் உற்சாகப்படுத்தினார்.
உபேந்திரா மிக உற்சாகமாக நடித்துத் தந்தார்.
ராஜ் பி ஷெட்டி அருமையான ரோல் செய்துள்ளார்.
இந்தப் படத்தில் பாடல்கள் இல்லை. இப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும். என்றார்.
படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.