கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர்.
அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கும் சென்னையில் நடைபெற்றது.
பிரசாந்துடன் அந்தகன் படத்தில் நடித்ததற்காக, 2024-ம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் நடிகை விருது சிம்ரன் பெற்றார். இந்த விருதினை இயக்குநர் எழில் வழங்கினார்.
விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய சிம்ரன், “இந்த விருது எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த டிசைன் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனந்த விகடன் குடும்பத்துக்கு ரொம்ப நன்றி. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பிரசாந்த் கூட இந்த படத்துல நடிச்சேன்.
ரீமேக் படம் ரொம்ப சேலஞ்சிங்கான விஷயம். இதனை அங்கீகரித்ததற்கு விகடனுக்கு நன்றி. தற்கால எல்லா டைரக்டருக்கும் என்னுடைய ஒரே கோரிக்கை, ப்ளீஸ் ரியல் உமன் சென்ட்ரிங் ரோல்ஸ் எழுதுங்க. நான் வெயிட் பண்றேன்” என்று கூறினார்.
நன்றி: ஆனந்த விகடன்