Take a fresh look at your lifestyle.

மீண்டும் வெப் தொடரில் இணைந்த சமந்தா!

41

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்துமே ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளது.

இவருக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு இருந்தது. இதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சைகள் பெற்றார். சினிமாவிலிருந்து விலகி சில வருடங்கள் ஒதுங்கி இருந்தார்.

தற்போது உடல் நலம் தேறிய பின்பு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார் சமந்தா. வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

ஏற்கனவே சமந்தா நடித்த பேமிலி மேன்-2 வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும்  வெப் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தும்பத் என்ற இன்னொரு வெப் தொடரிலும் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் ஆதித்யா ராய் கபூர், வாமிகா கபி ஆகியோரும் நடிக்கின்றனர்.

தற்போது இந்த தொடரின் படப்பிடிப்பில் இணைந்துள்ள சமந்தா, தனது வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், “கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு ரகிகர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.