Take a fresh look at your lifestyle.

இந்திய ரசிகர்களை நேசிக்கும் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்!

85

ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். இவர் 2009-ம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்டார் ட்ரெக்’ படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இசுநொவ் வைட் தி அண்ட், தி ஹன்ட்ச்மேன், ரஷ், பிளக்கட், போன்ற பல திரைப்படங்களின் நடித்துள்ளார்.

இதையடுத்து மார்வெல் திரைப் பிரபஞ்ச படங்களான தோர், தி அவெஞ்சர்ஸ் முதல், தோர் லவ் அண்ட் தண்டர் படம் உட்பட அனைத்து சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இதில் தோர் என்ற கதாபாத்திரம் இந்திய ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.

இந்நிலையில், தோர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்திய ரசிகர்களைப் பற்றி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இதைப் பற்றிப் பேசிய கிறிஸ், இந்தியாவையும் இந்திய ரசிகர்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும். 2018-ம் ஆண்டு ‘இன்பினிட்டி வார்’ வெளிவந்தபோது ஒரு வீடியோ பார்த்திருந்தேன். அதில், இந்தப் படத்தில் வரும் ‘பிரிங் மீ தானோஸ்’ காட்சிக்கு இந்திய ரசிகர்கள் ஒரு திரையரங்கில் பாப்கார்னை வைத்து எறிந்து ஆரவாரம் செய்தனர்.

அதுபோன்ற சம்பவத்தையும் அந்த ஒரு அன்பையும் நான் அதற்கு முன்பு எங்கேயும் பார்த்ததில்லை. ஒவ்வொரு முறையும் நான் இந்தியாவிற்கு வரும்போதும், அதை நினைத்துப் பார்ப்பேன்” என்று கூறியுள்ளார் நெகிழ்ச்சியாக.