நடிகர் அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் அவரது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதனிடையே, தற்போது, பார்சிலோனாவில் அஜித் கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தநிலையில், நடிகர் அஜித், குட் பேட் அக்லி படத்திற்காக, 8 கிலோ வரை தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக தகவல் வெளியானது.
தற்போது கார் ரேசிங்ஸில் முழு கவனைத்தையும் செலுத்தும் அஜித்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
இந்தப் புகைப்படத்தை பகிரும் அஜித் ரசிகர்கள், “நம்பமுடியாத அளவுக்கு மாறியுள்ளார்” எனப் புகழ்ந்து வருகிறார்கள்.
புகைப்படம்: அஜித்குமார் பேன்ஸ் கிளப் பக்கத்திலிருந்து.