Take a fresh look at your lifestyle.

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்குமார் சினிமா, ரேஸ் என இரட்டைக் குதிரைகளில் பயணம் செய்பவர். இரண்டிலும் வாகை சூடி வருகிறார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தயப் போட்டியில் அவரது அணி 3 ஆம் இடம் பிடித்து அசத்தியது.

இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்ற ரேஸிங் அணி 3 ஆம் இடம் பிடித்தது.

அதனைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் ஜிடி – 4 கார் பந்தயம் நடைபெற்று வரும் நிலையில், அதில் அஜித்குமார் கலந்து கொண்டார். மொத்தம் 43 கார்கள், சுழற்சி முறையில் 83 ஓட்டுநர்கள் கார் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.

அஜித் கார் இயக்கிக் கொண்டிருந்தபோது, போட்டி ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே அவரது, காரின் முன்பக்க டயர் வெடித்தது. அஜித் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விபத்தைத் தொடர்ந்து அஜித் பந்தயக் கார் டிராக்கில் இருந்து கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

ஏற்கனவே இதுபோன்ற கார் பந்தயங்களில் ஏற்பட்ட விபத்துகளில் அவர் பலமுறை தப்பி இருக்கிறார். அஜித் ஓட்டிய கார் டயர் வெடித்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.