Take a fresh look at your lifestyle.

க்ரைம் ஆக்‌ஷன் கதையாக உருவாகி இருக்கும் ‘டிஎன்ஏ’!

111

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்குமார் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி – நிமிஷா சஜயன் நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசையமைக்கிறார்!

‘டிஎன்ஏ’ படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்கள்.

பலவிதமான எமோஷன்ஸ், எனர்ஜி மற்றும் ரசிக்கக் கூடிய பல தருணங்களை படம் கொண்டுள்ளது. இதை காட்சி அனுபவமாக ரசிகர்களுக்கு மேம்படுத்தி கொடுக்க இசையமைப்பாளர் ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையும் படத்தில் அமைந்துள்ளது என்பதை படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருப்பதால் படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

க்ரைம் ஆக்‌ஷன் கதையாக உருவாகி இருக்கும் ‘டிஎன்ஏ’ திரைப்படத்தில் நம்பிக்கைக்குரிய நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர்.