Take a fresh look at your lifestyle.

எட்டாம் ஆண்டில் ‘மரகத நாணயம்’!

ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மரகத நாணயம்’. 2017-ம் ஆண்டு, ஜூன் 16ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் படம் வெளியாகி 7ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி படத்தின் நாயகன் ஆதி, நாயகி நிக்கி கல்ராணி உள்ளிட்ட படக்குழுவினர் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.