Take a fresh look at your lifestyle.

ஆஸ்கர் விருதுக்குப் போகும் 6 தமிழ்ப் படங்கள்!

61

திரைப்பட உலகில்  மிக உயர்ந்த விருது என்பது ஆஸ்கர் விருதாகும். இப்படிப்பட்ட இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக இருக்கும்.

இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த இயக்குநர் உட்பட சிறந்த படம்,  நடிகர், நடிகை, என பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் ஆண்டுதோறும் இந்த விழா நடைபெறுகிறது.

அதன்படி 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி (இந்திய தேதி படி மார்ச் 3) நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் 2025-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்காக 29 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழில் மட்டும் 6 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

1. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம்  ‘மகாராஜா’. இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

2. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.

3.மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக  வைத்து ‘வாழை’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளிவந்து வசூலிலும் விமர்சனத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

4. ‘கூழாங்கல்’ இயக்குநர் பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடித்து வெளிவந்த படம் ‘கொட்டுக்காளி’. சிவகார்த்திகேயன் தயாரித்த இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்தப் படத்திற்கு ‘கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

5. பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தில் மிகச்சிறந்த கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருப்பார்.

6. பாரி இளவழகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜமா’ படம். இப்படம் தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவான படம்.

மேலும், தெலுங்கில் ‘ஹனுமன் மற்றும் கல்கி 2898 ஏடி. இந்தியில் அனிமல் மற்றும் லாபட்டா லேடீஸ் மலையாளத்தில் உள்ளொழுக்கு, ஆடுஜீவிதம் மற்றும் ஆட்டம்’ உட்பட ஒருசில படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது.