Take a fresh look at your lifestyle.

‘சஞ்ஜீவன்’ – திரைப்பட விமர்சனம்!

258

சென்னை:

ஸ்னூக்கர் விளையாட்டில்  நண்பர்கள் மத்தியில்  நடக்கும் முக்கிய சம்பவங்களை மையமாக வைத்து, எதிர்பாராத விதமான திருப்பங்களும், பிரச்சனைகளும்  நிறைந்த படம்தான் ‘சஞ்ஜீவன்’  கதாநாயகன் வினோத் லோகிதாஸ், சத்யா என்.ஜே, ஷிவ்நிஷாந்த், விமல் ராஜ், யாஷின் ஆகிய ஐந்து பேர் நெருங்கிய நண்பர்கள். வினோத் லோகிதாஸ் ஸ்னூக்கர் விளையாட்டில் சிறந்து விளங்கும்போது,  ஒரு விளையாட்டு கிளப்பில் ஸ்னூக்கர் விளையாட்டு போட்டி நடக்கிறது. அந்த போட்டியில் அவர் தோற்று விடுகிறார். தோல்வியுற்ற வினோத் லோகிதாஸ் அதைப் பற்றி கவலைப் படாமல் மீண்டும் ஸ்நூக்கர் விளையாட்டு போட்டியில் கலந்துக் கொண்டு, ப வெற்றி பெறுகிறார். அவரது  வெற்றியை கொண்டாடுவதற்காக ஐந்து நண்பர்களும் சுற்றுலா செல்வதற்காக ஒரு காரில் செய்கிறார்கள். அனைத்து நண்பர்களும் ஜாலியாக காரை ஓட்டிக் கொண்டிருந்த நேரத்தில், போகும் வழியில் இரவில் ஆபத்து ஏற்படும் அளவுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையால்  என்ன பாதிப்பு நடக்கிறது. அந்த பாதிப்பிலிருந்து மீண்டார்களா? என்பதே ‘சஞ்ஜீவன்’ படத்தின் கதை.

இந்தப் படத்தில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் தனக்கான பணியை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இப்படத்தில் கதாநாயகன் வினோத் லோகிதாஸ் மிகவும் அமைதியான  கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்னூக்கர் விளையாட்டை இரசித்து விளையாடும் காட்சிகள்,காதல் காட்சிகள், நண்பர்களோடு இருக்கும் காட்சிகள் ஆகிய எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற நடிப்பினால் மிளிர்கிறார்.

நாயகனின் நண்பர்களாக வரும், சிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, ஆகியோரும் அவரவர் பங்கை நன்றாகச் செய்து படம் கலகலப்பாக நகர உதவியிருக்கிறார்கள். உருகி உருகி காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷிவ்நிஷாந்த், படம் முழுவதும் ஜாலியாக இருப்பதோடு, தனது நடிப்பால் கவனம் பெறுகிறார்.

கதாநாயகியாக திவ்யாதுரைசாமி நடித்திருக்கிறார். தனக்கு கொடுத்த பணியை செவ்வனே செய்து இருக்கிறார், அவரது அமைதியான ஆழமான நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஸ்வர்ணகுமார் நண்பர்களின் வாழ்க்கையை மிக இயல்பாக படமாக்கியிருக்கிறார். கார் சேசிங் காட்சி படமாக்கப்பட்ட விதம் மிரட்டும் வகையில் இருக்கிறது. தனுஜ் மேனனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான் என்றாலும் பின்னணி இசையை கதைக்கு ஏற்றபடி சிறப்பாக அமைத்திருக்கிறார்.

கதை எழுதி திரைக்கதை அமைத்திருக்கும் மணிசேகர் மிக சிறந்த முறையில் படத்தை இயக்கியிருக்கிறார். நண்பர்களின் வாழ்க்கையோடு, ஸ்னூக்கர் விளையாட்டையும் கதைக்களமாக்கி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஸ்னூக்கர் விளையாட்டு பற்றியும்  ரசிகர்களுக்கும் தெளிவாக புரிய வைத்திருக்கிறார்.

விளையாட்டு வினையில் முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக,  விளையாட்டாக ஒரு விஷயத்தை செய்யும் போது அது எவ்வளவு பெரிய விபரீதத்தில் போய் முடிகிறது என்பதை ‘சஞ்ஜீவன்’ படத்தை பார்க்கும்போது அனைவருக்கும் புரியும்.

மொத்தத்தில், ‘சஞ்ஜீவன்’ இளைய சமுதாயம் பார்க்க வேண்டிய படம்.