சென்னை:
கடந்த 2012ல் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.’லால் சலாம்‘ என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். தயாரிப்பு மேற்பார்வை சேது பாண்டியன் , நிர்வாக தயாரிப்பாளர் N சுப்ரமணியன் . இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப குழுவினர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று head of lyca production gkm தமிழ் குமரன் தெரிவித்தார் .
Aishwaryaa Rajinikanth dons the director’s hat for the 3rd time with ‘Lal Salaam’
Aishwarya Rajinikanth, who garnered positive response for her directional debut ‘3’(2012) is now all set to direct her third film after her last release Vai Raja Vai in 2015. Lyca Productions Producer Subaskaran is bankrolling the project. Vishnu Vishal and Vikranth have been roped in as lead roles.
Titled ‘Lal Salaam’, the film also has a special appearance by Superstar Rajinikanth. Vishnu Rangasamy is doing the Cinematography. Ramu Thangaraj has been roped in as the art director for the film and B. Pravin Baaskar has been roped in as the editor, along with Production Executive Sethu Pandian and Executive Producer N Subramaniam.
The pooja ceremony of the film was held today. Lyca Productions Head GKM Tamil Kumaran has confirmed that the shooting of ‘Lal Salaam’ will commence shortly. The cast and crew are yet to be finalized and will be officially announced soon.